அரியலூர், மே:08
அரியலூர் அரசு போக்குவரத்து பணி மனை அருகே கல்லங்குறிச்சி சாலையில் அண்ணா தொழிற் சங்கம் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அச்சங்கத்தின் செலயர் கல்லங்குறிச்சி பாஸ்கர் தலைமை வகித்தார். முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், அதிமுக மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் இளவழகன், மாநில எம்.ஜி.ஆர் அணி துணைச் செயலர் சிவசுப்பிரமணியன், மாவட்ட அதிமுக துணைச் செயலர் தங்கபிச்சைமுத்து, இணைச் செயலர் பவானி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவைச் செயலர் ஓ.பி. சங்கர், இணைச் செயலர் நா.பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



