தஞ்சாவூர் ஜூலை 2
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அக்னிவீர் வாயு திட்டத்தில் சேர விண்ணப்பிக்க லாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் கூறியுள் ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:
அக்னிபாத் திட்டத்தின் அக்னி வீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்காக திருமணமாகாத இந்திய ஆண் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து வருகிற8 தேதி முதல் 28 ஆம் தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க இந்திய விமானப் படை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
எனவே தகுதி உடைய விண்ணப் பதாரர்கள்agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ண ப்பிக்கலாம். இணைய வழித்தேர்வு 18.10.2024 அன்று முதல் நடைபெற உள்ளது .எனவே 3.7.2004 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் 3.1.2008 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர் கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வி தகுதி 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50சதவீதம் மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக் க வேண்டும்
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்ட்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷ ன் டெக்னாலஜி) 3 ஆண்டு டிப்ள மோ படிப்புகளில் மொத்தம் 50 சதவீ த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதியை பொருத்தவரை ஆண்கள் 152.5 செ.மீ . உயரமும், பெண்கள் 152 செ.மீ.உயரமும் இருக்க வேண் டும். தேர்வானது எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்து வ பரிசோதனை ஆகிய 3 நிலைக ளை கொண்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்ததேர்வுக்கு விண்ணப்பித்து பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது