தேனி.
தேனி மாவட்டம் காது கேளாதோர் சங்கத்தின் சார்பில் சைகை மொழியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதன்படி உலக காது கேளாதோர் சைகை மொழியாளகள் தினம் முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சி தலைவர் வளாகத்தில் கலெக்டர் ஆர்.வி. ஷஜீவனா குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காது கேளாதோர் மற்றும் சைகை மொழியாளர்கள் சார்பில் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு கலெக்டர் நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள், தேனி மாவட்ட விளையாட்டு மற்றும் காது கேளாதவர் சமூக நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.