காஞ்சிபுரம் மே 23
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 61 ஊராட்சி ஒன்றியங்களில் ஏழை எளிய மக்களின் கனவு இல்லமாகவே இருந்த நிலையில் அவ்வாறு உள்ள குடிசை வீடுகளில் கணக்கீடுகள் செய்யப்பட்டு வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 709 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர் கே தேவேந்திரன் தலைமையில்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு வாலாஜாபாத் அனைத்து ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 709 பொதுமக்களுக்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பணி உத்தரவு சான்றிதழ்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி, ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, பாலாஜி,பேரூராட்சி செயலாளர் பாண்டியன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 61 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பயனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.