தஞ்சாவூர்.மார்ச். 13.
தஞ்சாவூரில் மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள ஆர்.கே. மஹாலில் தமிழ்நாடு கிராம வங்கியின் ஊழியர்கள் சார்பில் சோழமண்டல நண்பர்கள் குழுவின ரால் மகளிர் தினம் கொண்டாடப் பட்டது.
விழாவில் தஞ்சாவூர் மண்டல மேலாளர் பிரசாத் தேவராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கிராம வங்கியின் தலைமை அலுவலக துணை பொது மேலாளர் மீரா ராஜன் மகளீர் தின சிறப்புரையாற் றினார் .
மகளிர் தின உறுதிமொழி அனைவராலும் வாசித்து ஏற்றுக் கொண்டனர். நிகழ்வில் ஊழியர்களின் ஆடல், பாடல், சிலம்பாட்டம் என குழந்தைகளுக் கான சிறப்பு நிகழ்ச்சிகளும், மகளிர் குழுவினரின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
நிறைவாக போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
முன்னதாக தஞ்சாவூர் தமிழ்நாடு கிராம வங்கியின் உதவி மண்டல மேலாளர் தமிழரசன் அனைவரை யும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சோழமண்டல நண்பர்கள் குழுவை சேர்ந்த ஜீவானந்தம் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சோழமண்டல குழுவின் மகேஷ் குமார், ராஜேஷ் ,சுந்தரேசன் நிதுன்,மணிவாசகம் ,பாபு மற்றும் பலர் சிறப்பாக செய்திருந்தனர்.
மகளிர் தின விழாவில் தமிழ்நாடு கிராம வங்கியின் அதிகாரிகள், ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.