தென்காசி மே 2
காலனி என்ற சொல் வசை சொல்லாக இருப்பதாக கூறி அரசு கோப்புகளில் அந்த வார்த்தையைஅகற்றிட திராவிட மாடல் ஆட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் என அண்மையில் தமிழக முதல்வர் சட்டசபையில் சூளுரைத்தார். அதே நேரம் தென்காசி மாவட்டத்தில் உள்ள தீண்டாமை கற்களை அகற்ற என்ன செய்யப் போகிறது இந்த திராவிட மாடல் ஆட்சி என சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பி உள்ளார் .
இது குறித்து பிரபல சமூக ஆர்வலர் சௌமேஷ் யாதவ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
காலம் காலமாய் சமூக நீதிகளுக்கு பாதுகாவல் அரனாய் இருப்பது போன்ற தோற்றத்தை காட்டி வரும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உள்ளபடியே கடந்த கால நியாயமான போராட்டங்களையும் தியாகங்களையும் புறந்தள்ளி தற்போது பதவி சுகத்திற்காக மட்டுமே போட்டா போட்டி கொண்டு இருக்கின்றனர் தாழ்த்தப்பட்ட மக்களின் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஆதி திராவிட பழங்குடியின மக்களை இழிவு படுத்தும் நோக்கில் அழைக்கப்படும் காலனி என்கின்ற சொல் வசைச் சொல்லாக நடைமுறையில் இருப்பதால் இந்த அரசு அலுவலக கோப்புகளில் அந்த வார்த்தைகளை நீக்கம் செய்து தடை விதிக்கப்படுகிறது என பறைசாற்றினார் ஆனால் வசைச்சொல் என்னும் காலணியை மட்டும் கோப்புகளில் அகற்றினால் மட்டும் அவர்கள் வாழ்வில் விடியல் ஏற்பட்டு விடுமா? அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் அனுதினமும் நிகழும் அவலங்கள் நீங்கி விடுமா? என்ற யதார்த்தமான கேள்விகளுக்கு தமிழக முதல்வரும் சரி அதன் கூட்டணி கட்சிகளும் சரி மௌனம் ஒன்றயே பதிலாக இந்த நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறார்கள் என்றே கூறலாம்.. அந்த வகையில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதன் பிறந்த மண்ணான தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் வீதிகளுக்குள் பிற ஜாதிய மக்கள் செல்வதற்கு தடையாக அவர்களது வாகனங்கள் செல்வதற்கு தடையாக தடை கற்களை ஊன்றி தடை ஏற்படுத்தி உள்ளனர் ஆண்டாண்டு காலமாக நாடு நலம்பெற, நல்லாட்சி மலர்ந்திட என வாய்கிளிய தேர்தல் நேரங்களில் கொக்கரிக்கின்ற அரசியல் கட்சிகள் இந்த சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளை தாண்டிய நிலையிலும் அந்த தீண்டாமை கற்களை அகற்றி எல்லோரும் ஓரினம் எல்லோரும் மனிதர்கள் என்ற சிந்தனையை செயலாக்கம் செய்திட முனைப்பு காட்ட வில்லை அதற்காக சட்டமன்றத்திலோ? பாராளுமன்றத்திலோ? குரல் கொடுக்கவும் இல்லை இதே போல் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலத்தூர் மற்றும் ஏனைய பகுதிகளிலும் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் வீதிகளில் இன்னும் பழமை மாறாமல் காலில் அணியும் செருப்புகளை கூட அகற்றி கையில் துண்டேந்தி செல்லும் நிலை நிலவி வருகிறது தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுக்கிறோம் என கூறிவரும் சில அமைப்புகளும் கூட இந்த தடை கற்களை அகற்ற குரல் கொடுக்கவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை ஓட்டு வங்கிகளைமட்டும் கணக்கில் கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப அன்பளிப்புகளை வழங்கி ஓட்டை பெற்றுக் கொள்வதை மட்டுமே வாடிக்கையா கொண்ட அரசியல் கட்சிகள் உள்ளபடியே ஆதி திராவிட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்காக பெயரளவில் மட்டும் விளம்பரம் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் உள்ளபடியே அன்றாடம் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் அவலங்களை களைய நடவடிக்கை எடுக்க யாரும் முன் வரவில்லை சமூக நீதிக்காக பாடுபடுகிறோம் அரணாக இருக்கிறோம் என்று கூறி வருகின்ற திராவிட மாடலாட்சியின் நாயகர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தீண்டாமை கற்களை அகற்ற நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…..