வேலூர்=16
வேலூர் மாவட்டம் ,வேலூர் காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் சென்னை போரூர், ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் காட்பாடி கீழ்வடுக்கன்குட்டை துர்கா மஹாலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் மாவட்ட தலைவர்(24-25) தலைவர்கள் பயிற்சி பட்டறை மற்றும் முதன்மை வழிகாட்டி ரோட்டரி சிவக்குமார் ,கௌரவ விருந்தினர் காட்பாடி துர்கா மஹால் சுரேஷ், ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர்.ரோட்டரி தலைவர் மகாதேவன், செயலாளர் சந்துரு, பொருளாளர் பிரபு, இயக்குனர் சமுதாய பணி மற்றும், இயக்குனர் சமுதாயப் பணி மற்றும் மருத்துவம் அருள் செல்வன் ,வேலூர் காஸ்மாஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ,பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.