தஞ்சாவூர். மார்ச் 5.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா ,முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 710 மனுக்களை அளித்தனர்.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மாற்றுத் திறனாளிகளுக்கு மின் கலம் பொருத்தப்பட்ட மின்கலங்களால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி தலா ரூபாய்1 லட்சத்து5 ஆயிரம் விதம் 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலும் , செயற்கை அவயங்கள் 10 பயனாளிகளுக்கு தலா ரூபாய்4700வீதம் ரூபாய் 47 ஆயிரம் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் ஆன நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரபாண்டி, சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் சங்கர் ,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட வழங்கள் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.