கிருஷ்ணகிரி,அக்.29- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூமை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த் தலைமையில் அதிமுக துணை பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி, ஓசூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெ.பி.(எ)ஜெயபிரகாஷ், சமூக ஆர்வலர் அமானுல்லா ஆகியோர் கலந்து கொண்டு புடவை, பட்டாசு, இனிப்புகள் மற்றும் கார வகைகள் ஆகியவை வழங்கினர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முனியப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



