ராமநாதபுரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
வடக்கு நகர் திமுக கழகத்தின் செயலாளர் கார்மேகம் ஏற்பாடு செய்திருந்தார்
ராமநாதபுரம், நவ.28-
இராமநாதபுரம் வடக்கு நகர திமுகழகத்தின் சார்பில்
இளைஞர்களின் எழுச்சி நாயகன், இளந்தலைவர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவுறுத்தின்படி ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இராமநாதபுரம் வடக்கு நகர செயலாளர் நகர் மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில்
உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மாவட்ட தலைவர் கார்த்திக் முன்னிலையில் பஸ் ஸ்டாண்ட் அருகில் பேரறிஞர் அண்ணா திருவுருவசிலைக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர்
பழைய பேருந்து நிலையத்தில் கழக இரு வர்ண கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து
பஸ் ஸ்டாண்ட் சாலையோர வியாபாரிகளுக்கும் ஆதரவற்றோருக்கும் மதிய உணவு வழங்கி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிகழ்வில் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், மற்றும் நகராட்சி திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.