தேனி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சக மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னுடைய தந்தை பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகளை செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் பெறும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. போடிநாயக்கனூர் மாற்றம் செய்யும் மாற்றுத்திறனாளிகளின் சங்கத்தின் சார்பில் சிவா தனது மறைந்த தந்தையின் பிறந்த நாளில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மற்றும் அரசு உதவித்தொகை வாங்காத மாற்றம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு சங்கத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாற்றம் செய்யும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக இலவச நோட், பேனா, புக் வழங்கி தனது தந்தையின் பிறந்த நாளில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முல்லை மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க நிறுவனத் தலைவர்,தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள்மாநில நலவாரிய உறுப்பினர் எஸ். கருப்பையா, ஜெயம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க நிறுவனத் தலைவர் எஸ். ரவி, சக்ஷம் தேசிய மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் செயலாளர் ஏ.எஸ். பிரபாகரன், நவஜோதி மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் சார்பாக பாலகிருஷ்ணன் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை சிறப்பித்தனர்.



