கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தின் மூலம் 16 கிராமங்களிலுள்ள 9012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் 9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 130 நாட்களுக்கு முதல் போக விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் .கே.கோபிநாத் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 05.07.2024 முதல் 11.11.2024 வரை 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.
கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் தற்பொழுது உள்ள நீர் அளவினை கொண்டும் நீர்
வரத்தினை எதிர்நோக்கியும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலதுபுற கால்வாய் மூலம்
வினாடிக்கு 75 கன அடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 76 கன அடி வீதம்
என மொத்தம் 151 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டத்திலுள்ள, பெரியமுத்தூர், சுண்டேகுப்பம்,
திம்மாபுரம், சௌட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வே அள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி,
எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வர மடம், காவேரிப்பட்டிணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி,
நாகோஜன அள்ளி, ஜனப்பரஅள்ளி ஜெகதாப் மற்றும் பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில்
உள்ள 9,012 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும்.
கிருஷ்ணகிரி அணையின் நிலவரம் அணையின் தற்போதைய
கொள்ளவு 1348.09 கன அடி (49.10 அடி), அணையின் நீர்வரத்து 303 கன அடியாகும்.
ஊற்றுக்கால்வாயில் 12 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.எனவே விவசாய பெருமக்கள் விவசாயத்திற்கு நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். மேலும் நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்.கே.எம்.சரயு . அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் .செந்தில்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் .பச்சையப்பன், உதவி பொறியாளர் .சையத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட விவசாய பெருமக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.