நாகர்கோவில் – ஜூலை 19,
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சி
விஷ்ணுபுரம் ஆலமூடு குளத்தில் நேற்று குளிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியானார்,இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஏற்கனவே அந்த குளத்தில் கோட்டார் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பலியானார்,இரண்டு பேர் பலியானதை தொடர்ந்து தற்போது இறச்சகுளம் ஊராட்சி மன்றம் சார்பில் ஆபத்தான குளம் என எச்சரிக்கை பலகை வைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.