ஏப்ரல்:9
இந்திய நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது.இது நாடு முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் ஒருங்கிணைத்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட செயலாளர்.APR.மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
ஒன்றிய பாஜக அரசு புதிய வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும், சிறுபான்மையினர் மீதான ஒடுக்கு முறைகளை நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரைப்பட இயக்குனர் சிபி சந்தர், முன்னாள் மண்டல செயலாளர் சுசி கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர். பழ.சண்முகம்,கிழக்கு மாவட்ட செயலாளர்.ஓவியர் மின்னல்,தெற்கு மாவட்ட செயலாளர்.சதீஷ்குமார்,ஈரோடு மாவட்ட செயலாளர்கள்.S.M. சாதிக்,கமலநாதன்,இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர். துரை வளவன்,மண்டல துணை செயலாளர்.ஜாபர் அலி,மாவட்ட துணை செயலாளர்.சத்தியன்,மகளீர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர்.பட்டு ரோஜா,ஜெய் பீம் சுசீலா,மற்றும் ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.