திருவெண்ணெய்நல்லூர், டிச. 11 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவம் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., அ.ஜெ.மணிக்கண்ணன் முன்னிலை வகித்தார். ஆலை மேலாண்மை இயக்குனர் முத்து மீனாட்சி அனைவரையும் வரவேற்றார். விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கரும்பு அரவை பணியினை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர்கள் பி.வி.ஆர்.விஸ்வநாதன், மா.சந்திரசேகரன் மற்றும் சடகோபன், டாக்டர்.காவியவேந்தன், கிருஷ்ணராஜ், தலைமை கரும்பு அலுவலர் வில்லியம் அந்தோனி, கரும்பு அபிவிருத்தி அலுவலர் தாமரைச்செல்வி, துணை தலைமை பொறியாளர் செந்தில்குமார், தலைமை ரசாயனர் பொறுப்பு பாலசுப்பிரமணியன், கணக்கு அலுவலர் செந்தில்குமார், பணியாளர் அருள்பிரகாசம், விவசாய சங்க பிரதிநிதிகள் வெங்கடேசன், பக்தவச்சலம், ஜோதிராமன், திருமால் முருகன், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலக பணியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.



