திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் கிராம அறிவியல் திருவிழா நடைபெற்றது
கிராம அறிவியல் திருவிழா திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் வானவில் மற்றும் சார்பாக அறிவியல் சோதனைகளை காட்சிப் படுத்தியிருந்தனர். முக்கியப் பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள் கண்டு வியந்து பாராட்டினர்.
திண்டுக்கல் மாவட்ட 18 SRP களும் இந்த நிகழ்வில் பெரும் பங்காற்றினர். அமைப்புசார் DC மணி அற்புதராஜ், இணை DC வளர்மதி, முன்னாள் CO-DC பரமேஸ்வரி ஆகியோர் நிகழ்வை சிறப்பாக வெற்றிகரமாக நடப்பதற்கு பெரும் பங்காற்றினர்.அரசுசார் ஒருங்கிணைப்பாளர் உமா, APO செல்வராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர்கள், ஆகாகுரு அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ஒட்டன்சத்திரம் கிருத்துவ மேல்நிலைப் பள்ளியின் நிர்வாகம் கிராம அறிவியல் திருவிழாவை நடத்துவதற்கு பேறுதவி செய்தது. அதன் முதல்வர் பிரகாசம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.நிகழ்வில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. வானவில் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் ஓராண்டுகள் பணிகளின் தொகுப்பு அடங்கிய நூல் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் வெளியிட வானவில் மன்றத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பெற்றுக்கொண்டார்.
அதேபோல் வானவில் மன்ற வினாடி வினா தொகுப்பு 2022-2025 என்ற நூலும் திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை APO செல்வராஜ் வெளியிட அரசியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சங்கர் பெற்றுக் கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர், முனைவர் சங்கரன், கல்வித்துறை அதிகாரிகள் செல்வராஜ், உமா வானவில் மன்ற தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் மாணவர்கள் காட்சிப்படுத்திய அறிவியல் சோதனைகளை பொறுமையாக கேட்டறிந்து உற்சாகப்படுத்தினர்.
மொத்தத்தில் வானவில் மன்றத்தின் நோக்கம் மிகச் சிறப்பாக நிறைவேறி இருப்பதை திண்டுக்கல் மாவட்டத்தின் கிராம அறிவியல் திருவிழா கட்டியம் கூறியது. அந்தப் பள்ளி வளாகமே அறிவியல் கருத்துக்களாலும் அறிவியல் மனப்பான்மையாலும் மாணவர்களால் சூழப்பட்டு இருந்ததை உணர முடிந்தது.வானவில் மன்றத்தின் கருத்தாளர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் திண்டுக்கல் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பாராட்டி கேடயங்கள் வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.