கிருஷ்ணகிரி ஆக 16:
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கடாபுரம் ஊராட்சியில் மெட்பெண்டா கிராமத்தில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் தலைவர் ராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் குறித்தும் கிராம வளர்ச்சிக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும் பல்வேறு இடங்களில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்தும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. பல்வேறு நோய்களிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும், என வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். மேலும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், சுய உதவிக் குழுவின் பயன்கள், குறித்தும் எடுத்துரைத்தார். பின்னர் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். 28 வது சுதந்திர தின விழா கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி பொதுமக்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் பொதுமக்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.