கன்னியாகுமரி அக் 19
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விஜய்வசந்த் எம்.பி போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திறந்த வாகனத்தில் பொதுமக்களை சந்தித்து பல கட்டங்களாக நன்றி தெரிவித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்கல் தபால் நிலையம் முன்பு இருந்து மாலை 4:00 மணிக்கு
குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமையில் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜய் வசந்த்-க்கு பொதுமக்கள் பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளித்தனர், மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அவர்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
இந்த நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம் செல்லங்கோணம், கஞ்சிக்குழி, பள்ளியாடி, இரவிபுதூர்கடை, சாமியார்மடம், மருதூர்குறிச்சி, வெள்ளிக்கோடு, கூட்டமாவு, கோழிப்போர்விளை, மூளகுமூடு வழியாக அழகியமண்டபம் பகுதியில் இரவு 7:00 மணியளவில் நிறைவு செய்தார்.
நன்றி அறிவிப்பு சுற்றுபயண நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ரத்தினகுமார், அரோக்கியராஜன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், வட்டார தலைவர்கள் பொன் சாலமன், ராஜசேகரன் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் உள்பட காங்கிரஸ் மாநில, மாவட்ட, வட்டார, பேரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வழி நெடுகிலும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆளுயர மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.