கிருஷ்ணகிரி ஆகஸ்ட் 28
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாப்பர்த்தி ஊராட்சி பனகமுட்லு கிளைக் கழகத்தில் விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் விழாவில் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட அவை தலைவர் சின்னராஜ், ஆகியோர் வழிகாட்டுதலின்படி, காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய் வல்லரசு ஆலோசனையின்படி, ஒன்றிய பொருளாளர் கணக்கன், ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் கோவிந்தசாமி, ஏரியூர் சின்னபையன், ஆறுமுகம், சத்யா, தீபா, ஆனந்தன், செல்வி, குப்புசாமி, ராஜன், உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.