நாகர்கோவில் செப் 13
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது :-
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரும், மூத்த தலைவருமான சீதாராம் யெச்சூரி மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவ பருவத்திலிருந்தே தன்னை அரசியலில் ஈடுபடுத்தி, மாணவர்களின் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தியவர் சீதாராம் யெச்சூரி அதன் பின்னர் மக்கள் பிரச்சனைகளுக்காகவும் குறிப்பாக தொழிலாளர் நலனுக்காகவும் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.
பல ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக எதிர் கட்சி வரிசையில் ஒரு சிறந்த தலைவராக விளங்கி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடிய ஒரு தேசிய தலைவரை இழந்து விட்டோம். அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது