கொட்டாரம் நவ 18
குமரி மாவட்டம் கொட்டாரம்-ஆறுமுகபுரத்தில்.
புன்னகை மன்னன்-மறைந்த முன்னாள் எம்.பி.,நினைவு கலையரங்கம்.
விஜய் வசந்த் எம்.பி.,திறந்து வைத்தார்.
கொட்டாரம் ஆறுமுகபுரம் அங்கன்வாடி மையம் முன்பு விஜய்வசந்த் எம்.பி.,சொந்த நிதியியல் ரூ.2 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டது.
இதற்கான திறப்புவிழா நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு,கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக எம்.பி.,விஜய்வசந்த் கலந்து கொண்டு புதிய கலையரங்கினை திறந்து வைத்தார்.இதில்,காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ராமச்சந்திரன்,தாமஸ்,ஊர் தலைவர் முத்துக்குமார், செயலாளர் கார்த்திக் குமார், பொருளாளர் மகேந்திரன் ,நிர்வாகிகள் சாம் சுரேஷ் குமார்,டேனியல் ,கிங்ஸ்லி,திமுக நிர்வாகிகள் தமிழ்மாறன்,தாமரை பிரதாப்,வினோத் ,விசிக நிர்வாகி சஞ்ஜய் வளவன்,உட்பட பலர் பங்கேற்றனர்.