ஸ்ரீபெரும்புதூர்
ஏப்ரல் 12
காஞ்சிபுரம் மாவட்டம்
ஸ்ரீபெரும்புதூர்
ஒன்றியம் கீரநல்லூர் ஊராட்சியில் 32.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
மேலும் அந்த கட்டிடத்தின் சுவர்கள் அனைத்திலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், உலகம் & இந்திய வரைபடம் ஆகியவை கண்கவர் ஓவியங்களாக தீட்டப்பட்டு குழந்தைகளுக்கு பேசும் மொழியாக வரையப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.
இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பெரும்புதூர் ஒன்றிய சேர்மன் எஸ்.டி. கருணாநிதி,திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நா.கோபால், பிடிஒ பத்மாவதி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்யராஜ்,மாவட்ட கவுன்சிலர் சோகண்டி பால்ராஜ், ஐடி பிரிவு சத்யா, திமுகவின் குன்னம் முருகன்,கீரநல்லூர் சிலம்பரசன், ஊராட்சித் துணைத் தலைவர் அமுதவல்லி முருகன் வார்டு உறுப்பினர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் பூங்கோதை மற்றும் அரசு அதிகாரிகளுடன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.