சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 18 ஆம் தேதி தொடங்கப்பட்ட அகழாய்வுப் பணி பத்தடி நீளமும் பத்தடி அகலமும் கொண்ட இரண்டு குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. இதில் 3 அடிக்கு ஆழம் தோண்டப்பட்ட நிலையில் கருப்பு சிவப்பு பச்சை போன்ற பல வண்ண நிறங்களில் பானை ஓடு சில்லுகள் கிடைத்துள்ளன. இந்த பானை ஓடு சில்லுகளை தரம் பிரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஓடுகளை தரம் பிரிக்கும் பணியில் கீழடி அகழாய்வு இயக்குனர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.