மதுரை மார்ச் 13,
மதுரை மாநகரில் ஏற்படும் விபத்துகளை குறைக்கும் பொருட்டும் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவுப்படியும் துணை ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வாகன சோதனை நடைபெற்றது. அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருக்கும் 20 வாகனங்களை கண்டறிந்து அவற்றை கழட்டிய தோடு அவற்றின் பாதிப்புகள் குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ், மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபனா, சார்பு ஆய்வாளர்கள் சுரேஷ் விஸ்வநாதன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.