நாகர்கோவில் டிச 30
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க நிபுணர் குழு அமைத்து அடிக்கல் நாட்டியது அதிமுக ஆட்சியில் தான் “வள்ளுவனும் அதிமுகவும் “
திருவள்ளுவர் சிலை குறித்து
தளவாய்சுந்தரம் எம் எல் ஏ வீடியோ வெளியிட்டு விளக்கம்.
1979 ல் ஏப்ரல் 15 ஆம் தேதி அன்றைய தமிழக முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர் முன்னிலையில் அன்றைய பாரத பிரதமர் மொராய் தேசாயால் திருவள்ளூர் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பாறையின் தன்மை சிலை அமைத்தல் தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் திருவள்ளூர் சிலை அமைக்க ரூ. 1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் விடுவிக்கப்பட்டது.
திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை முதன் முறையாக பூசியது அதிமுக ஆட்சியில் தான்.
திருவள்ளுவர் பெயரில் விருது, பல்கலைக்கழகம் அமைத்தது அதிமுக ஆட்சியில் தான்.
திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்று சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் திருக்குறளை அகற்றியது திமுக அரசு.
வள்ளுவர் சிலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருபவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை திமுக அரசு எனவும் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைய முதல் காரணமே அதிமுக தான் என
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரம் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்து இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது.