தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த சிக்கலூர் கிராமத்தில் உள்ள தனியார் கோழிப் பண்ணையில் தங்கி பணிபுரியும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உத்தம்கட்டா, (22) பவித்தரசந்திரன், (25) இருவரும்நேற்றிரவு அருகில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்றுவிட்டு அருகில் உள்ள ரூபி என்பவரின் விவசாய நிலத்தின் வழியாக வரும்போது வயலுக்கு காட்டு விலங்குகள் அதிகமாக வருவதால் அதை தடுப்பதற்காக கள்ளத்தனமாக வைக்கப்பட்டிருந்த மின் ஓயரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் உத்தம்கட்டா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பவித்திரசந்திரன் காயமடைந்து கோழிப்பணயைக்கு சென்று உத்தம்கட்டாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது மகனை தேடிச் சென்ற அபிரகாம்கட்டா, (45) அதே வயலில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த பவித்திரசந்திரன் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



