செப்:10
குற்ற சம்பவங்கள் நடக்கின்ற பிரதான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது
என்று அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில்
முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோல்டன் நகர், கொங்கு நகர், தொட்டிபாளையம், அங்கேரிபாளையம் பகுதிகளுக்கும் திருப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.V.ஜெயராமன் பங்கேற்று அடையாள அட்டையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர மாவட்ட துணை செயலாளர் பூலுவாபட்டி பாலு, பகுதி செயலாளர்கள் ஹரிஹரசுதன், கோபால்சாமி, வேலுமணி, கருணாகரன், திலகர் நகர சுப்பு, பி பி.கே.எம்.முத்து உட்பட அதிமுக நிர்வாகிகள் பல பங்கேற்றனர். இதை தொடர்ந்து முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி ஜெயராமன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்.எடப்பாடியார் ஆலோசனையின் படி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று வருகிறது, வட்டக் கழக செயலாளர் மூலமாக நேரடியாக அடையாள அட்டை உறுப்பினருக்கு வழங்கப்பட்டு வருகிறது, கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பூரில் சொத்து வரி, உயர்வு மின் கட்டண உயர்வு போன்றவற்றால் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது, தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர், பலர் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர், இங்குள்ள தொழில்களை காப்பாற்றாமல் அமெரிக்காவில் உள்ள தொழில்துறையினரை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குங்கள் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார், வேரிலே வெந்நீரை ஊற்றி விட்டு, விழுது பன்னீரை தெளித்துவிட்டு வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர், இது தொழில்துறையினரை சந்திக்கும் பயணமா? அல்லது ஸ்டாலின் சைக்கிளில் சுற்றும் உல்லாச பயணமா என்று போகப் போக தான் தெரியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் சொல்கின்ற பணிகளை பொறுப்பாளர்கள் ஆகிய நாங்கள் சிறப்பான முறையில் செய்து முடிப்போம், ஜனநாயக நாட்டில் கட்சி ஆரம்பிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு, யார் கட்சி ஆரம்பித்தாலும் மக்களின் முன்னேற்றத்திற்காக போராட வேண்டும், எம்ஜிஆர் அவர்கள் 30 ஆண்டு காலம் மக்களுக்காக வாழ்ந்து மகத்தான தலைவரானார் அது போன்று மக்களுக்காக வாழ்பவர்களுக்கு மட்டும்தான் அங்கீகாரம் கிடைக்கும் என்றும், தமிழகத்தில் தினம் தோறும் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றை நடைபெற்று வருகிறது, தமிழகத்தில் இன்று துரதிஷ்டவசமான ஆட்சி நடைபெற்று வருகிறது குற்ற சம்பவங்கள் நடக்கின்ற பிரதான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் என்று பேசினார்.