புதுக்கோட்டை மாநகராட்சி, நரிமேடு 1-வது வார்டு பகுதியில், அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.89.95 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பாதாள சாக்கடை திட்டப் பணியினை தமிழ்நாடு அமைச்சர்கள் எஸ்.ரகுபதி மற்றும் சிவ.வீ.மெய்யநாதன். ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்கள். உடன் மேயர் திலகவதி செந்தில் சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன் , துணை மேயர் எம்.லியாகத் அலி, மாநகராட்சி செயலாளர் செந்தில் உறுப்பினர்கள் பழனிவேல் மதியழகன் பால்ராஜ் ஆணையர் த.நாராயணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர்.



