சிங்காரப்பேட்டையில் சாலையோர புளியமரம் சாய்ந்து இரண்டு கார்கள் சேதம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் குருகப்பட்டி சாலையோரம் இருந்த 100 வருடம் பழமையான புளியமரம் சாய்ந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்தது.
சிங்காரப்பேட்டை உறவினர் வலைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த, திருவண்ணாமலை மாவட்டம், காவலர் குடியிருப்பை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பெருமாள்(53). மற்றும் அவரது உறவினர்கள் வந்த காரை புளியமரத்தின் அருகில் நிறுத்திவிட்டு நிகழ்சிக்கு சென்றனர். திடிரென புளியமரம் சாய்ந்தது இதில் இரண்டு கார்கள் மீது மரம் விழுந்ததில் கார்கள் நொருங்கி சேதம் அடைந்து விட்டது. மற்றொறு கார் சிறிய சேதத்துடன் தப்பியது. காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார், கார் மீது விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.