ராமநாதபுரம், நவ.25-
ராமநாதபுரம் கேணிக்கரை போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சக்கரக்கோட்டை அப்துல் கலாம் நகர் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த ராமநாதபுரம் சிவஞானபுரம் ரோட்டை சேர்ந்த அப்துல் மஜீத் மகன் ஹமீத் அஹம்மது (21), ராமநாதபுரம் காட்டூரணியை சேர்ந்த முகம்மது மரைக்காயர் மகன் ஹபீப் முகம்மது ( 22) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையின் போது அவர்களிடம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 கிராம் எடையுள்ள மெத்தம்பெத்தடமின் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து போதைப் பொருள், ரூபாய் 20000 ரொக்கம், இரண்டு செல்போன்கள், இரண்டு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கேணிக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து போதைப் பொருள் எங்கிருந்து கொண்டு வந்தனர். இங்கு யாருக்கு சப்ளை செய்யப்படுகிறது போன்ற விபரங்கள் குறித்து விசாரித்து வருகிறார்.