சென்னை பல்லாவரத்தில் உள்ள புனித செபஸ்தியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அனகாபுத்தூரை சேர்ந்த சுவேதா மற்றும் சுரேகா ஆகிய இரட்டை சகோதரிகள் 12ம் வகுப்பு படித்து வந்தனர். இந்தநிலையில் இன்று 12ம் வகுப்பு போது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் இரட்டை சகோதரிகளும் 600க்கு 597 மற்றும் 590 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவி சுவேதா 600க்கு 597 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 2ம் இடமும், செங்கல்பட்டு மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று அசத்தி உள்ளார். மாணவி சுவேதா தமிழ், கணக்குபதவியல், பொருளாதரம் ஆகிய பாடங்களில் 100க்கு 99 மதிப்பெண்களும்,
ஆங்கிலம், வணிகவியல் வணிக கணிதம் ஆகிய பாடங்களில் 100/100 மதிப்பெண்களும் எடுத்து அசத்தி உள்ளார்.
பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவி சுவேதாவிற்கு பள்ளி சார்பில் இனிப்புகள் ஊட்டி பாராட்டினர். அதேபோல் இரட்டை சகோதரியான உடன்பிறந்த மற்றொரு மாணவி சுரேகாவும் அதே பள்ளியில் படித்து 600க்கு 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஒரே பள்ளியில் படித்த இரட்டை சகோதாரிகளும் பிளஸ்2 தேர்வு முடிவுகளில் அதிக மதிப்பெண் பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புனித செபஸ்தியார் பள்ளியில் 3 இடத்தை பம்மலை சேர்ந்த ரெய்ஹா ஸ்ரீ 600/570 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த 3 மாணவிகளுக்கும் பல்லாவரம் புனித செபஸ்டியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் அருட்பணி ஜான் லூர்துசாமி, பள்ளி முதல்வர் செல்மா ஆகியோர் பொன்னாடை போர்த்தியும், மாணவிகளுக்கு இனிப்பு ஊட்டியும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.