அஞ்சுகிராமம் செப்-14
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர்
.வெள்ளையன் கடந்த 10 ம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அஞ்சுகிராமம் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டு அவரது திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் நலசங்க தலைவர் அஞ்சை வஸீம் தலைமை தாங்கி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். செயலாளர் இராஜலிங்கம், பொருளாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் வாரியூர் நடராஜன், ஹிட்லர், சுரேஷ், ஜெகன், பொறியாளர் முத்துக்குமார், பாலன், சுந்தரம் பிள்ளை, கவுன்சிலர் வீடியோ குமார், விஸ்வநாதன், சேகர், கணேஷ் சௌந்தர பாண்டியன், பாலன், முருகன், முருகேசன், கிறிஸ்டோபர், சுரேஷ்,
செல்வகுமரன் உட்பட பொதுமக்கள், ஆட்டோ ஒட்டுநர்கள், பலர் கலந்து கொண்டனர்.