நாகர்கோவில் ஆக 6
குமரி மாவட்டம் மேக்காமண்டபதில் கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் தலைமையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி இதய அஞ்சலி செலுத்தப்பட்டது.
கேரள மாநிலம் வயநாடு பகுதிகளான மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுமார் 350 க்கு மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்டம்,
மேக்காமண்டபம், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோண் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர்,
மாநில பொதுக்குழு உறுப்பினர் லாரன்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார்,
திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ஜெபா, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சக்திவேல் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.