கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் சாலையோரம் இருந்த பழமை வாய்ந்த புளியமரம் இன்று மாலை திடீரென சாய்ந்து சாலையில் விழுந்தது. வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது புளியமரம் திடீரென சாய்ந்து சாலையில் விழுந்தது. நல்வாய்ப்பாக இளைஞர்கள் அங்கிருந்து விலகி சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபரம் அறிந்த வந்த நாகோஜனஹள்ளி பேரூராட்சி நிர்வாகத்தினர் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு மரத்தை வெட்டியெடுத்து அப்புறப்படுத்தினர். இதனால் காவேரிப்பட்டிணம்- சந்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



