மதுரை நவம்பர் 25,
மதுரை மேம்பால பணிகளால் போக்குவரத்து மாற்றம்
மதுரை, சிவகங்கை சாலை மேலமடை சந்திப்பில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பி.சி. பெருங்காயம் சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மேல மடை சந்திப்பு நோக்கி வராமல், மாட்டுத்தாவணி, விரகனூர் சுற்றுச்சாலை வழியாக மாற்று வழித்தடத்தில் மதுரை நகருக்குள் செல்லும் வகையில் மதுரை மாநகராட்சி போக்குவரத்து காவல்துறை சார்பில் நவம்பர் 24 சோதனை முறையிலும், நாளை நவம்பர் 26 ஆம் தேதி முதல் தொடர்ந்தும் போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.