வேலூர்=28
வேலூர் மாவட்டம் வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக அலுமினியம் அசோசியேஷன் மற்றும் என் எஸ் எஸ்
பாரம்பரிய விதை திருவிழா
மற்றும் மரபுவிதை கண்காட்சி, 100 மரகன்றுகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர்
ஜே.மேகலா, தலைமையிலும்
கல்லூரியின் முன்னாள் முதல்வர். த.ஆறுமுகமுதலி, ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்கம் அமைப்பு செயலாளர் ச.தயாளன் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பு செய்திருந்தார். கண்ணமங்கலம் பி மாலதி துவக்க உரையாற்றினார் பாகாயம் வன சரக அலுவலர் எம். முருகன் , காட்டுப்புத்தூர் முன்னாள் தலைவர் விஸ்வநாதன் ,ஆகியோர் சிறப்புரையாற்றினர் .நிகழ்ச்சி நிறைவாக1994-1997 முன்னாள் மாணவர் ஆ. விஜயபாஸ்கர் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள், பலர் பங்கேற்றனர்.