ராமநாதபுரம், ஜூன் 23 –
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மேல்நிலை பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அரசு விதித்துள்ளது. இது தொடர்பாக கோட்ட ஆய அலுவலர் முருகேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் கீழக்கரை – ஏர்வாடி முக்கு ரோடு பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்பகுதியில் உள்ள ராம்குமார் கடையில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 2.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார், துணை வட்டாட்சியர் பரமசிவம், வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் உடன் இருந்தனர்.