கன்னியாகுமரி நவ 14
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.செந்தில்குமார் தலைமையில் கன்னியாகுமரி பேரூராட்சியும், உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.நெகிழி இல்லாத கன்னியாகுமரி உருவாக்க வேண்டும் என்ற ஆட்சியரின் உத்தரவுப்படி கன்னியாகுமரியில் சர்ச் ரோட்டில் உள்ள காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் விவேகானந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள உணவகங்கள் பேக்கரிகள் மளிகை கடைகள் தேநீர் கடைகள் அரிசி கடைகள் இறைச்சி கடைகள் காய்கறி மற்றும் பழக்கடைகள் உள்ளிட்ட 75 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன.ஆய்வின்போது தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படக் கூடிய 31.500கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு கன்னியாகுமரி பேரூராட்சி சுகாதார அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும் உணவகங்களில் காலையில் சமைத்து பயன் படுத்திய பின் மீதமாகி குளிர் பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சாம்பார், குருமா , அச்சிடப் பட்ட காகிதத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வடை, பஜ்ஜி, சமோசா, காலாவதியான சமையல் எண்ணெய், வனஸ்பதி,சேவு மிக்சர் பாக்கெட்டுகள், மனித உணவுக்கு தகுதியற்ற நிலையில் அழுகிய நிலையில் இருந்த காய்கறிகள் பழங்கள் உட்பட சுமார் 41கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்கள், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யும் பழக்கடைகளுக்கு 3000 ரூபாய் அபராதமும், தடை செய்யப்பட ஒரு முறை பயன்படக் கூடிய நெகிழிப் பைகள் மூலம் உணவு பொருட்களை விற்பனை செய்த 10 கடைகளுக்கு தலா 2000 வீதம் மொத்தம் ரூ 20,000 அபராதமும்,ஏற்கெனவே பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்ட ஒரு உணவகத்தில் மீண்டும் ஒருமுறை மட்டுமே பயன்படக்கூடிய பாலித்தீன் பைகள் கைப்பற்றப்பட்டதால் இரண்டாம் முறை குற்றத்திற்காக அந்த உணவகத்திற்கு ரூ5000 அபராதமும் விதிக்கப்பட்டது, உணவு பாதுகாப்பு மாநில உரிம வகைப்பாட்டில் உள்ள ஒரு கடைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் நேரடியாக சிவில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த கூட்டாய்வில் சர்ச் ரோடு காய்கறி மார்க்கெட்டில் ஒரு கடையில் 1.900 கிலோ தடை செய்யப்பட மெல்லும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடைக்கு 25000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் உடனடியாக அந்த கடையை அகற்றவும் பேரூராட்சிக்கு பரிந்துரை செய்யப் பட்டது.அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படக் கூடிய நெகிழிப் பைகள் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டது.இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்தி முருகன்,ரவி, ஜெஃப்ரி, கன்னியாகுமரி பேரூராட்சி சுகாதார அலுவலர் முருகன் மற்றும் கணபதிபுரம் பஞ்சாயத்து செயல் அலுவலர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.