அக். 30
திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025 வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் திருமதி சுல்தனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) .ஜெயராமன், வட்டாட்சியர் (தேர்தல்) தங்கவேல் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.