நாகர்கோவில் மார்ச் 30
குமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்ட முதல் நாள் அவர் தெரிவிக்கும் போது பெண்கள்,மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுதிருந்தார். அதனை கடுமையாக கடைபிடித்து நிறைவேற்றியும் வருகிறார் . அந்த வகையில்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, வீட்டை விட்டு சென்ற 8வது மற்றும் 6 வது வகுப்பு மாணவிகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் இலப்பகோணம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின் உத்தரவும் நடவடிக்கையும்:-
கடந்த 13.03.25 அன்று 8 வது மற்றும் 6 வது வகுப்பு படிக்கும் இரு பள்ளி மாணவிகள் வீட்டை விட்டு சென்றனர். இது சம்பந்தமாக தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.உடனடியாக மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவுப்படி மாவட்ட காவல்துறையினர் இரு பள்ளி மாணவிகளையும் கண்டறிந்து மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் . 100 க்கும் மேற்பட்ட CCTV காட்சிகள் ஆய்வு செய்து, தொழில் நுட்ப உதவியுடன் போலீசார் இருபள்ளி மாணவிகளையும் கண்டறிந்து மீட்டனர்
இந்த வழக்கில் தக்கலை இலப்பகோணம் பகுதியை சார்ந்த ராஜன் என்பவர் மகன் அஜித்குமார் என்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த போக்சோ குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா குற்றவாளியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அவரின் உத்தரவின்படி குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் விரைவாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.