நாகர்கோவில் ஜன 7
குமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகரில் இயங்கி வரும் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் ஜான் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :-
நாங்கள் நாகர்கோவில் சைமன் நகரில் இயங்கி வரும் திருவள்ளுவர் அறக்கட்டளை
என்ற அமைப்பின் வழியாக பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றோம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருகின்ற நாங்கள் அலுவலகத்தின் எந்தெந்த துறை எங்கு உள்ளது என்று தெரியாமல் தடுமாறி நிர்கின்றோம். அதனால் தங்கள் அலுவலகத்தில் துறைவாரியாகப் பெயர் பலகை வைக்கவும், நுழைவாயிலில் வழிகாட்டுதல் பலகை வைத்தால் மக்களுக்கு எளிமையாக சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்தித்து மனு வழங்க உதவியாக இருக்கும். எனவே எங்களது இக்கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.