திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, பொத்தூர் ஊராட்சியில் வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு. ஒன்றியத் தலைவர் மற்றும் போலீஸ் பார்வை மாத இதழ் முதன்மை ஆசிரியர் டாக்டர் எஸ்.முருகானந்தம் (எ)நந்தா ஆகியோர் தலைமையில் ஒன்றிய அளவிலான கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்திற்கு 50 க்கும் மேற்பட்டோர் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேவையான உதவிகளையும் வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு செய்து தர உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தனர். இந்த நிகழ்வின் போது ஒன்றிய நிர்வாகிகள் இளம்பரிதி செல்வி லஷ்மி. சிவகாமி ஜானகி, மீனாட்சி, சத்யா, ஜெரினா, உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.