திருப்புவனம்:ஜீன்:01
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டமானது அவைத்தலைவர் தினகரன் தலைமையிலும் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பழையனூர் சுப்பிரமணி , மாவட்ட இளைஞரணி துணை அமேப்பாளர் மணலூர் கே. எம். பொற்கோ ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக மாவட்ட துணைச்செயலாளரும் பேரூராட்சி தலைவருமான த. சேங்கைமாறன் தீர்மானங்களை வாசித்து சிறப்புரையாற்றினார்.அதில் கழக ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை ஒவ்வொரு கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் எடுத்துச் செல்வது, மற்றும் வருகின்ற 3 ம் தேதி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, கழக இருவண்ணக்கொடியை ஏற்றிட வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அறிவுக்கரசு , மாவட்ட விவசாய அணி சொக்கனாதிருப்பு டி. ஆர்.சேகர் , அச்சங்குளம் முருகன்,துணைத்தலைவர் ரஹமதுல்லா கான், மாவட்ட சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர், மேனாள் இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், சுப்பையா,ஒன்றியக்கழக நிர்வாகிகள் இளங்கோவன் , பொருளாளர் சக்திமுருகன், மடப்புரம் மகேந்திரன்,தேளி கோபால், அன்னமுத்து இளங்கோவன் மடப்புரம் ஜெயக்கொடி, கொத்தங்குளம் செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.