சிவகங்கை ஜூன் 04
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ச.அபர்ணா.
(2025)ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடமும் இப்பள்ளியில் முதல் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதனை போற்றும் வகையில் பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் சாதனை படைத்த மாணவி சபர்ணாவை வெகுவாக பாராட்டினர்.
இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் மாணவியை நேரில் அழைத்து
பாராட்டு செய்து வாழ்த்து தெரிவித்தார்.
உடன் மாணவியின் பெற்றோர்கள் அ.சத்தியவாணிமுத்து,
ச.மங்கையர்கரசி ஆகியோர் உடன் உள்ளனர்