திருவண்ணாமலை மாவட்டம் மார்ச் 6.
ஒன்றிய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. ஃபைஜி -ஐ பொய் வழக்குப் புனைந்து அமலாகத்துறை கைது செய்ததை கண்டித்து திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
மாவட்ட தலைவர் A.முஸ்தாக் பாஷா தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்தினார் மேலும் மாவட்டச் செயலாளர்
S.இப்ராஹிம் பாஷா கண்டன உரையாற்றினார், திருவண்ணாமலை மாவட்ட பொதுச்செயலாளர் S.ஷபீர் பாஷா ,மாவட்டத் துணைத் தலைவர் K.பிலால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.ஜாஃபர் அலி, A. ஆரிப் கான் முன்னிலை வகித்தனர், மேலும் திருவண்ணாமலை தொகுதி தலைவர் D.ராஷித், கீழ்பெண்ணாத்தூர் தொகுதி செயலாளர் S.ஜாகீர் பாஷா ,மாவட்ட செயலாளர் N.தபுரேஸ் மற்றும் உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.