ஈரோடு ஜூலை 22
இந்து முன்னணி சார்பில் கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே கோவிலை விட்டு வெளியேறு என்ற கோர்க்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது
இதே போல ஈரோடு மாநகர மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஈரோடு
மூலப்பாளையத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 40 பெண்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர் இதனால் தடையை மீறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
ஈரோடு மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார்
கோவை கோட்ட செயலாளர் பாபா கிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் இதில் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.