திருப்பத்தூர்:ஜூலை:22, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மதி சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.விஸ்வநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர் உமாமகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் பிரியா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



