மதுரை ஜூலை 23,
மதுரை, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் இயக்குனர் (Pipelines) N.செந்தில்குமார் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தின் நிர்வாக இயக்குநர் A.ஆறுமுகம் இணைந்து IOCL City Gas Distribution (CGD) of Madurai Geographical Area- CNG பேருந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிர்வாக இயக்குனர் S.K.Jha மற்றும் தெற்கு மண்டல (Pipelines) தலைமை பொது மேலாளர் ரானு ராம் கலந்து கொண்டனர். TNSTC உடனான
IOCL-இன் நீண்ட கால உறவைக் கருத்தில் கொண்டு, CNG பேருந்து மாற்றமானது இந்தியன் ஆல் மூலம் செயல்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு மாநிலத்தில் CNG பேருந்துகளின் சோதனை ஓட்டம் மற்றும் சோதனையை எளிதாக்கும் நோக்கத்துடன் இருந்தது. கடந்த இரண்டு வாரங்களில் வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு. CNG பேருந்துகளின் செயல்திறன் நம்பிக்கையளிப்பதாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளது.
தற்போதுள்ள டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதன் மூலம் நெட் ஜீரோ கார்பன் உமிழ்வை அடைவதற்கான தமிழக அரசின் முக்கிய படியாகும். CNG ஒரு சுத்தமான மற்றும் பசுமையான எரிபொருளாக இருப்பதைத் தவிர பணச்சேமிப்பு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.4.00 முதல் ரூ.4.50. இது TNSTC இன் தற்போதைய OPERATION COST இழப்புகளை ஈடுசெய்யும். சிஎன்ஜி மலிவான எரிபொருளாக இருப்பதால், டீசலுடன் ஒப்பிடும் போது 12-13% வரை எரிபொருள் செலவில் நேரடி சேமிப்பு உள்ளது. மேலும் நகர எரிவாயு விநியோகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியன் ஆயில் நிறுவனம். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டம் ஆகஸ்ட் 2024 மாதம் முதல் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.