பிப்:14
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட பொதுச் செயலாளர் மேற்கு மண்டல செயலாளர் துரை ரமேஷ் தேவர் தனது ஆதரவாளர்களுடன் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திலிருந்து முழுமையாக விடைபெறுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தர்.
மேலும் பேசுவையில் கடந்த 22 ஆண்டு காலமாக இயக்கத்தில் பணியாற்றி 20க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் கட்சி நிகழ்ச்சிகள் நடத்தி இருப்பதாகவும் கட்சி தலைமையில் இருந்து தங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை எனவும் எந்த ஒரு ஒத்துழைப்பும் வழங்கவில்லை எனவும் தனது ஆதரவாளர்களும் நேற்று மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில் இருந்து வெளியேறினார். அலுவலகத்தில் இருந்த புகைப்படங்களை உடனே அகற்றினர். விரைவில் மாற்று கட்சியில் அல்லது சமுதாய அமைப்பில் இணைவதாக தெரிவித்தார்…