சங்கரன்கோவில். ஜூன்.12.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து சென்னையில் அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு முன்னிலையில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஶ்ரீ குமார் ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்வின் ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏ தங்க பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி,
சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர் இன்பா ரகு, ஓன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.